எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : மராட்டியத்தில் 24 மணி நேரமும் கடைகள், ஓட்டல்கள் திறக்க மாநில அரசு அனுமதி தெரிவித்துள்ளது.
மராட்டியத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் கடைகள், ஓட்டல்கள் செயல்படுவதை போலீசார் மற்றும் உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் தடுத்து வருவதாக வியாபாரிகள், ஓட்டல் அதிபர்கள், வணிக சங்கங்கள் மாநில அரசிடம் புகார்கள் தெரிவித்து இருந்தனர். இதனைத்தொடர்ந்து மாநில அரசு மகாராஷ்டிரா கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 2017-ன் விதிகளை மேற்கோள் காட்டி அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல், ரெஸ்டாரண்ட், தியேட்டர்கள், பொழுதுபோக்கு சார்ந்த இடங்கள் 24 மணி நேரமும் திறந்து இருக்கலாம். இதில் பணிபுரிந்து வரும் ஒவ்வொரு ஊழியருக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை கட்டாயம் வழங்கப்பட வேண்டும். வாரத்தின் அனைத்து நாட்களில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் திறந்து இருக்கலாம். ஆனால் மது கடைகள், பீர் பார்கள், நடன பார்கள், ஹூக்கா பார்லர்கள், பப் போன்றவைகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி இல்லை. மாநில அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட கால வரம்புக்குள் மட்டுமே தொடர்ந்து செயல்பட வேண்டும்.
கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைக்க அரசு அனுமதி அளித்து இருப்பதற்கு வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் அரசின் உத்தரவை மேற்கு இந்திய ஓட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட சங்கம் வரவேற்று உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


