எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 5, 6ம் தேதிகளில் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருந்த 5ம் கட்ட பிரசார சுற்றுப் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு, வரும் 8, 9ம் தேதிகளில் நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொள்வார் என்று அ.தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- அ.தி.மு.க. பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் `மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்துடனான `புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணம்’- 8.10.2025 முதல் 10.10.2025 வரையிலான ஐந்தாம் கட்ட சுற்றுப் பயணத் திட்டம்- திருத்தம் பின்வருமாறு:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி `மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, கடந்த 7.7.2025 முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரசார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் ஐந்தாம் கட்ட சுற்றுப் பயணத் திட்டத்தில், 5.10.2025, 6.10.2025 ஆகிய தேதிகளில் நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த சுற்றுப் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு, தேதி, கிழமை, கழக அமைப்பு மாவட்டம், சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் சட்டமன்றத் தொகுதி வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
1) 8.10.2025 - புதன் - நாமக்கல்- திருச்செங்கோடு, குமாரபாளையம்.
2) 9.10.2025 - வியாழன்- நாமக்கல்- நாமக்கல், பரமத்தி வேலூர்.
3) 10.10.2025 - வெள்ளி- ஈரோடு - மொடக்குறிச்சி, ஈரோடு (கிழக்கு).
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


