Idhayam Matrimony

பல அபாயங்கள் நிறைந்துள்ளன: ட்ரம்பின் அமைதி ஒப்பந்தத்திற்கு ஹிஸ்புல்லா தலைவர் எதிர்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 5 அக்டோபர் 2025      உலகம்
Iran 2025-10-04

Source: provided

காசா : காசாவில் போர் நிறுத்தத்திற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்வைத்த திட்டத்தில் பல அபாயங்கள் நிறைந்துள்ளதாக லெபனானின் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நயீம் காசிம் குற்றம் சாட்டியுள்ளார்.

போரில் அடைய முடியாததை அரசியல் ரீதியாக இந்த ஒப்பந்தம் மூலம் இஸ்ரேல் அடைய முயல்வதாகவும், இது பாலஸ்தீனியர்களின் நிலத்தைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் என்றும் அவர் தெரிவித்தார். ஜோர்டான், லெபனான், சிரியா போன்ற நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கிய 'கிரேட்டர் இஸ்ரேல்' திட்டத்தை நாம் அனைவரும் எதிர்க்க வேண்டும் எ நயீம் காசிம் வலியுறுத்தினார். ஒப்பந்தத்தை ஏற்பதா, வேண்டாமா என்ற இறுதி முடிவு ஹமாஸின் கையில் தான் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

டிரம்ப்பின் திட்டத்தின்படி இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுக்க ஹமாஸ் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், ஹிஸ்புல்லாவின் இந்தக் கருத்து வந்துள்ளது. இருப்பினும், ஒப்பந்தத்தில் உள்ள ஆயுதங்களை கைவிடுதல், காசா நிர்வாகத்திலிருந்து விலகுதல் ஆகியவற்றை ஹமாஸ் ஏற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து