Idhayam Matrimony

கனமழை, வெள்ளம்: நேபாளில் 47 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 5 அக்டோபர் 2025      உலகம்
Napal 2025-10-04

Source: provided

காட்மாண்டு : நேபாளத்தில் பெய்து வரும் கனமழை, திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்திய எல்லைக்கு அருகிலுள்ள கிழக்கு நேபாளத்தின் இலாம் மாவட்டத்தில் மட்டும் ஏற்பட்ட பல நிலச்சரிவுகளில் 35 பேர் கொல்லப்பட்டனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. தலைநகர் காத்மாண்டுவில் பாகமதி உள்ளிட்ட பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதனால் காத்மாண்டு சாலைகள் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு நேபாளத்தில் உள்ள கோசி ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்வதால், கோசி தடுப்பணையின் 56 மதகுகளும் திறந்துவிடப்பட்டுள்ளன. மேலும் நேபாளத்தில் நாளை வரை மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதற்கிடையே இந்தியாவின் மேற்கு வங்க  மாநிலம் டார்ஜிலிங் அருகே மிரிக் பகுதியில் கனமழை வெள்ளத்தால் பாலம் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தால் சிலிகுரி - மிரிக் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த பகுதியின் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலம் இடிந்த விபத்தில் பலர் நீரில் அடித்துச்செல்லப்பட்டதால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து