Idhayam Matrimony

அமிர்தசரஸில் இருந்து பிரிட்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறால் பயணிகள் அவதி

ஞாயிற்றுக்கிழமை, 5 அக்டோபர் 2025      இந்தியா
Air-India

Source: provided

அமிர்தசரஸ் : பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் நகருக்கு சென்ற ஏர்-இந்தியா விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். 

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் நகருக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, ரேம் ஏர் டர்பைன் பயன்படுத்தி விமானம் பர்மிங்காம் விமானநிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பர்மிங்காமில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை விமான நிறுவனம் செய்தது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு விமான நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. சமீபகாலமாக விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து