எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவுடன் மீண்டும் போர் ஏற்படுவதை மறுக்க முடியாது என்று பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாமில் கடந்த ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியாகினர். இதையடுத்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது.
ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா நடத்திய இந்த தாக்குதலில், பாகிஸ்தானில் உள்ள பல பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. இதையடுத்து, இந்தியாவின் எல்லையோர மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன்களை கொண்டு தாக்க முயன்றது. பாகிஸ்தானின் இந்த அடாவடிக்கும் இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. 3 நாள் நீடித்த இந்த சண்டையில் பாகிஸ்தானுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இந்தியாவிடம் சண்டை நிறுத்தம் செய்யுமாறு பாகிஸ்தான் கோரியது. இதன் பிறகே இரு நாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது.
பாகிஸ்தான், சமீபகாலமாக இந்தியாவுக்கு எதிராக ஆத்திரமூட்டும் கருத்துக்களை கூறி வருகிறது. அந்த வகையில், பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் காவ்ஜா ஆசிப் அடாவடியாக பேசியுள்ளார். காவ்ஜா ஆசிப் கூறியதாவது:“இந்தியாவுடன் மீண்டும் போர் ஏற்படுவதை மறுக்க முடியாது. மீண்டும் போர் வந்தால், முன்பை விட சிறந்த முடிவை அடைவோம்,” என்று அடாவடியாக பேசியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


