முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் வரலாறு காணாத உச்சம்: ஒரு பவுன் தங்கம் விலை ரூ.91 ஆயிரத்தை கடந்தது

புதன்கிழமை, 8 அக்டோபர் 2025      தமிழகம்
gold 2025-01-03

Source: provided

சென்னை : தங்கம் விலை நேற்று அக்.8) 2-வது முறையாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பிற்பகலில் பவுனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.91,080 க்கு விற்பனையானது. நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு பவுன் ரூ.1480 விலை உயர்ந்து அதிர்ச்சியைக் கடத்தியுள்ளது. இதன்படி நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு பவுன் தங்கத்தின் விலை 1,480 ரூபாய் அதிகரித்துள்ளது. 

சர்வதேச பொருளாதார நில​வரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்றமும் இறக்கமும் இருந்து வருகிறது. இதன் அடிப்படையில், செப்.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் ஆபரணத் தங்கம் செப்​.23-ம் தேதி ரூ.85,120 ஆக உயர்ந்தது. எச்​1பி விசாகட்டணத்தை அமெரிக்க அரசு உயர்த்தியது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு முக்கியக்காரணமாக அமைந்தது. அமெரிக்கா வட்டி விகிதங்களைக் குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதுவும் தங்கம் விலை உயர ஒரு காரணம்

இதன்​பிறகு, ஓரிரு நாட்கள் இறக்கமாகவும், பெரும்பாலான நாட்கள் ஏற்றமாகவும் இருந்து வந்தநிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன் (அக்.6) பவுன் தங்கம் ரூ.89 ஆயிரத்தை தொட்டது. இதன் தொடர்ச்சியாக, ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றும் (அக்.7) பவுனுக்கு ரூ.600 உயர்ந்​து, ரூ.89,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலையில் (அக்.8) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,300-க்கு விற்பனையானது. அதேபோல் பவுனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.90,400-க்கு விற்பனையானது. காலையில் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.167-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,67,000-க்கும் விற்பனையானது

இந்த சூழலில், தங்கத்தின் விலை நேற்று 2-வது முறையாக உயர்ந்துள்ளது. அதன்படி பிற்பகலில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,385 ஆக உயர்ந்து விற்பனையானது. அதேபோல பவுனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.91,080 ஆக அதிகரித்து விற்பனையானது. இதன்படி நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு பவுன் தங்கத்தின் விலை 1,480 ரூபாய் அதிகரித்துள்ளது. மேலும், வெள்ளியின் விலையும் ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.170 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,70,000 ஆக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து