எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பாட்னா : பீகாரில் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பா.ஜ.க. அறிவித்துள்ளது.
பீகாரில் 18-வது சட்டசபை தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 14-ந்தேதி நடைபெறும். இந்நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் மத்திய மந்திரியான கிரிராஜ் சிங் செய்தியாளர்களிடம் பேசும்போது, பீகார் சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதீஷ் குமார் இருப்பார் என கூறினார்.
இந்த தேர்தலில் தொகுதி பங்கீட்டில், கூட்டணி கட்சிகளுடன் எந்தவித வேற்றுமையும் இல்லை என்றும் அதுபற்றி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன என்றும் விரைவில் இறுதி முடிவு எட்டப்படும் என்றும் கூறினார். அதுபற்றி அப்போது உங்களுக்கும் தெரியப்படுத்தப்படும் என்றார்.
2020-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க., நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதனை எதிர்த்து போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளை கொண்ட மகா கூட்டணி 110 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. நிதிஷ்குமார் 20 ஆண்டுகளாக தொடர்ந்து முதல்வர் யாக இருந்து வருகிறார்.
வருகிற தேர்தலில், முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 107 தொகுதிகளிலும், பா.ஜ.க. 105 தொகுதிகளிலும் போட்டியிடும். மீதம் உள்ள 31 தொகுதிகளை, லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ் பஸ்வான்), இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் சமதா கட்சி ஆகியவை பகிர்ந்து கொள்ளும். நிதிஷ் குமார், கடந்த 20 ஆண்டுகளாக 5 முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
இந்நிலையில், மத்திய மந்திரி கிரிராஜ் சிங் தொடர்ந்து கூறும்போது, இந்தியா கூட்டணியை குறிப்பிட்டு பேசினார். அவர், மகா கூட்டணியானது ஒரு பிளவுபட்ட வீடு போன்றது என்று கூறினார். தேஜஸ்வி யாதவ், ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்றும் அவர், மகா கூட்டணியின் வேட்பாளர் இல்லை என்றும் காங்கிரஸ் கட்சி முன்பே தெளிவாக கூறி விட்டது. அதனால், மகா கூட்டணி தலைமை இன்னும் முடிவு செய்யப்பட வில்லை. எங்களுடைய கூட்டணியில், கொள்கை, தலைமை மற்றும் நோக்கம் அனைத்தும் முடிவு செய்யப்பட்டு விட்டது. இதில் அதிருப்தி எதுவும் இல்லை என்றும் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


