முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைமைப்பதவியில் 25 ஆண்டுகால பயணம்: பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். வாழ்த்து

புதன்கிழமை, 8 அக்டோபர் 2025      தமிழகம்
EPS 2020 11-16

Source: provided

சென்னை : தலைமை பதவியில் 25 ஆண்டுகள் பயணம் செய்த பிரதமர் மோடிக்கு எடிப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.

பிரதமர் மோடி, குஜராத் முதல்-மந்திரியாக பதவி வகித்து, பின்னர் பிரதமராக பொறுப்பேற்று  25 ஆண்டுகள் ஆகிறது. மேலும் இந்த வாய்ப்புக்காக இந்திய மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார். 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி அவர் குஜராத் முதல்- மந்திரியாக பதவியேற்றார். அப்போது முதல் தற்போது வரை அவரது பயணம் பற்றிய விவரங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், தலைமைப்பதவியில் 25 ஆண்டுகாலம் நிறைவு செய்த பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 25 ஆண்டுகளாக அரசியலமைப்பு சட்டத் தலைவராக தொடர்ந்து பதவி வகித்து வரலாற்றுச் சாதனை படைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக சார்பில் மனமார்ந்த வாழ்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 

இந்த இணையற்ற மைல்கல், உங்கள் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், அரசியல் சாதுர்யம் மற்றும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கும், தேசத்திற்கு நேர்மையுடன் சேவை செய்வதற்கும் உறுதியான அர்ப்பணிப்புக்கு சான்றாக நிற்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து