Idhayam Matrimony

விஜய்யின் பிரச்சார பேருந்தை பறிமுதல் செய்ய தனிப்படை போலீசார் தீவிரம்

புதன்கிழமை, 8 அக்டோபர் 2025      தமிழகம்
Vijay-Bus 2025-10-08

Source: provided

கரூர் : விஜய்யின் பிரச்சார பேருந்தை பறிமுதல் செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டியுள்ளது.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி கரூரில் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டார். இதற்காக நாமக்கல்லில் இருந்து கரூர் வரும் வழியில் தவுட்டுப்பாளையம் போலீஸ் சோதனைச்சாவடி அருகே மாலை 4 மணியளவில் விஜய்யின் பிரச்சார பேருந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது, த.வெ.க.வினரின் 2 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விஜய்யின் பிரச்சார பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆனால் விஜய்யின் பிரச்சார பேருந்து நிற்காமல் அங்கிருந்து சென்றுவிட்டது. இந்த விபத்தில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

இதுதொடர்பாக வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலைய ஏட்டு தெய்வபிரபு அளித்த புகாரின் பேரில் த.வெ.க. பிரச்சார பேருந்து டிரைவர் மீதும், மோட்டார் சைக்கிள்களை ஓட்டி வந்த த.வெ.க. தொண்டர்கள் 2 பேர் மீதும் வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்தநிலையில் விஜய்யின் பிரச்சார பேருந்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை? என்று தமிழக அரசு வக்கீல்களிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதன் அடிப்படையில் அரவக்குறிச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு அப்துல் கபூர் தலைமையிலான தனிப்படையினர் விஜய் பிரச்சார பேருந்தை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் உயர் அதிகாரிகளிடம் இருந்து விஜய்யின் பிரச்சார பேருந்தை பறிமுதல் செய்ய எந்த நேரத்திலும் உத்தரவு வரும் நிலையில் உள்ளது. இவ்வாறு உத்தரவு வந்தவுடன் போலீஸ் துணை சூப்பிரண்டு அப்துல் கபூர் தலைமையிலான போலீசார் சென்னையில் உள்ள போலீசாரின் உதவியுடன் விஜய்யின் பிரச்சார பேருந்தை பறிமுதல் செய்ய உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து