முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் துயர சம்பவம் தொடர்பாக விஜய் மீது நடவடிக்கையா? - அமைச்சர் முத்துசாமி விளக்கம்

புதன்கிழமை, 8 அக்டோபர் 2025      தமிழகம்
Muthusamy 2023-07-27

Source: provided

ஈரோடு : கரூர் துயர சம்பவம் தொடர்பாக  விஜய் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா  என்பது குறித்து அமைச்சர் முத்துசாமி விளக்கமளித்துள்ளார்.

ஈரோட்டில் வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கரூர் துயர சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் அரசியல் லாபத்துக்காக தமிழக அரசை குறை கூறி வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக முழு பிரச்சினைகளையும் அரசு வீடியோக்கள் மூலம் விளக்கி உள்ளது. எனவே மக்கள் உண்மைகளை முழுமையாக அறிந்து கொள்வார்கள். தமிழ்நாடு அரசின் விசாரணை ஆணையமும் விசாரணையை தொடங்கி உள்ளது.

கோர்ட்டும் பல்வேறு வழிமுறைகளை வழங்கி உள்ளது. எனவே விசாரணையின் அடிப்படையில் போலீஸ் துறை நடவடிக்கை எடுக்கும். விஜய் மீது நடவடிக்கை எடுக்க பயம் இல்லை. கரூர் சம்பவத்துக்கு காரணம் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். கரூர் துயர சம்பவம் குறித்து அறிந்ததும் நள்ளிரவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகளை வழங்கினார்.

சிறுநீரகம் திருட்டு விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணை முடிந்த பிறகே உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து