எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : இந்திய பொருளாதாரம் உயரும் என்று உலக வங்கி கணித்துள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை மையமாக கொண்டு உலக வங்கி இயங்கி வருகிறது. இது உலகநாடுகளில் பொருளாதாரத்தை கண்காணிக்கும் சர்வதேச நிறுவனமாக உள்ளது. இந்தநிலையில் இந்த நிதியாண்டில் (2025-26) இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணித்திருந்தது. அமெரிக்க வர்த்தக வரிவிதிப்பு, உலகநாடுகள் இடையேயான போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்தியா கடுமையாக பாதிக்கப்படும் என தெரிவித்திருந்தது. இந்தநிலையில் உலக வங்கி தனது நிலைப்பாட்டை மாற்றி வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என உயர்த்தி கணித்துள்ளது. உள்நாட்டு தேவை வளர்ச்சி, விவசாய உற்பத்தி, வலுவான நுகர்வோர் வளர்ச்சி, மேம்பட்ட வேளாண்மை உற்பத்தி, கிராமப்புற ஊதிய வளர்ச்சி ஆகியவை இதற்கு முக்கிய காரணம் என உலக வங்கி தெரிவித்துள்ளது. வங்கதேசத்தின் வளர்ச்சி 4.8 சதவீதமாகவும், பூடானின் வளர்ச்சி 7.3 சதவீதமாகவும், மாலத்தீவின் வளர்ச்சி 3.9 சதவீதமாகவும், நேபாளத்தின் வளர்ச்சி 2.1 சதவீதமாகவும் இருக்கும் என கணித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


