எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
துபாய் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆடவருக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர்களான சிராஜ், கே.எல். ராகுல், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
ஜடேஜா 25-வது இடம்...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆடவருக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர்களான சிராஜ், கே.எல். ராகுல், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். அந்த வகையில் பேட்டிங் தரவரிசையை பொறுத்தவரை ஜடேஜா 6 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக இந்த இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
ஜோ ரூட் முதலிடம்...
அதேபோல கே.எல். ராகுல் 4 இடங்கள் முன்னேறி 35-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் ஜோ ரூட் தொடர்கிறார். இதை தவிர பெரிய அளவில் எந்த மாற்றம் இல்லை. அடுத்ததாக பந்து வீச்சில் இந்திய அணி வீரர் முகமது சிராஜ் 3 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தை பிடித்துள்ளார். அதேபோல குல்தீப் யாதவ் 7 இடங்கள் முன்னேறி 21-வது இடத்தை பிடித்துள்ளார்.
வாஷிங்டன் சுந்தர்....
முதல் இடத்தில் பும்ரா தொடர்கிறார். மற்றபடி எந்த மாற்றமும் இல்லை. ஆல்ரவுண்டகள் பட்டியலில் யாரும் நெருங்க முடியாத முதல் இடத்தில் ஜடேஜா உள்ளார். இந்த பட்டியலில் 4 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் பிடித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


