முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் 3 இருமல் மருந்துகளில் கலப்படம்: உலக சுகாதார அமைப்பிடம் தகவல் தெரிவித்த மத்திய அரசு

வியாழக்கிழமை, 9 அக்டோபர் 2025      தமிழகம்
Irumal-Donic 2025-10-09

Source: provided

சென்னை: இந்தியாவில் 3 இருமல் மருந்துகளில் நச்சுதன்மையுள்ள ரசாயனம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பிடம் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 'கோல்ட்ரிஃப்' எனும் இருமல் மருந்தால் மத்தியப் பிரதேசத்தில் 22 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் நாடு முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, இந்தியாவில் இருந்து நச்சுத்தன்மையுள்ள இருமல் மருந்துகள் எதுவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதா? என மத்திய அரசிடம் உலக சுகாதார அமைப்பு கேள்வி எழுப்பியிருந்தது.

இதற்கு பதில் அளித்துள்ள மத்திய அரசு, இந்தியாவில் 3 இருமல் மருந்துகளில் நச்சு கலப்படம் கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. கோல்ட்ரிஃப் மருந்து வெளிநாடுகளுக்கு எதுவும் ஏற்றுமதி செய்யப்படவில்லை என்று கூறியது. தமிழ்நாட்டில் ஸ்ரீசன் பார்மாட்டிகல்ஸ் தயாரித்த 'கோல்ட்ரிஃப், குஜராத்தில் ரெட்னெக்ஸ் பார்மாட்டிகல்ஸ் தயாரித்த 'ரெஸ்பிஃபிரெஷ் டிஆர்' மற்றும் குஜராத்தைச் சேர்ந்த மற்றொரு நிறுவனமான ஷேப் பார்மா பிரைவேட் லிமிடெட் தயாரித்த 'ரீ லைஃப் ஆகிய மருந்துகளில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய டைஎத்திலீன் கிளைகால் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கோல்ட்ரிஃப் மருந்தில் அதிகளவாக 48.6சதவீதம், ரீ லைஃப் - 0.616சதவீதம், ரெஸ்பிஃபிரெஷ் -1.342சதவீதம் என்ற அளவில் டைஎத்திலீன் கிளைகால் கலக்கப்பட்டுள்ளது. இது மருந்தை அடர்த்தியானதாக மாற்றவும் இனிப்புச் சுவைக்காகவும் பயன்படுத்தக் கூடியது. மேலும் இது நீரில் கரையக்கூடியது. நிறமற்ற, வாசனையற்றதாகும். இந்த மருந்துகளை குறைந்த அளவில் குழந்தைகளுக்குக் கொடுத்தாலே கடுமையான விளைவுகள் ஏன், மரணம்கூட ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து