எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கரூர் : கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் 3 இடங்களில் முகாமிட்டு சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர்.
கரூரில் நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 5-ந் தேதி முதல் கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த குழுவினர் 3 வெவ்வேறு குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசு சுற்றுலா மாளிகையில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வந்த சிறப்பு புலனாய்வு குழுவினர் தற்போது 3 இடங்களில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். அதன்படி தாந்தோணிமலை அரசு சுற்றுலா மாளிகை, அரசு சுற்றுலா மாளிகைக்கு அருகே உள்ள அரசுக்கு சொந்தமான கட்டிடம், கரூர் மாவட்டம் புகழூரில் உள்ள டி.என்.பி.எல். வளாகம் ஆகிய 3 இடங்களில் சிறப்பு புலனாய்வு குழுவினர் முகாமிட்டு விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கடந்த 3 தினங்களுக்கு முன்பு உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் 7 பேர் ஆஜரான நிலையில், நேற்று 3 பேரும் ஆஜரானார்கள். அவர்களிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி முடித்ததாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


