எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் நிகழ்ச்சியில் பெண் நிருபர்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. தலீபான் அரசின் வெளியுறவு அமைச்சராக பதவி வகிக்கும் அமீர் கான் முத்தகி முதன்முறையாக இந்தியாவுக்கு 6 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் புதுடெல்லிக்கு கடந்த புதன்கிழமை புறப்பட்டார். அவருடைய இந்த பயணத்தில், மத்திய வெளிவிவகார துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பிற அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசுகிறார் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தகவல் தெரிவித்து உள்ளது.
இதில், அரசியல், பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்கள் பற்றி பேசப்படும் என தகவல் தெரிவிக்கின்றது. இந்நிலையில், டெல்லியில் அவர் நேற்று முன்தினம் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது முத்தகி, பெண்கள் யாருக்கும் அனுமதி இல்லை என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த சந்திப்பில் பேசிய முத்தகி, இந்தியாவுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்திய லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத குழுக்களுக்கு நாங்கள் எந்தவித இடமும் அளிக்கவில்லை. அதனால், அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதேரா மற்றும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், டெல்லியில் ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர்யின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பெண் நிருபர்களுக்கு தடை விதிக்கப்பட்டது பற்றி மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், டெல்லியில் ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் முத்தகி நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பெண் நிருபர்களுக்கு தடை விதிக்கப்பட்ட சம்பவத்தில், மத்திய வெளிவிவகார அமைச்சகத்திற்கு எந்தவித தொடர்பும் கிடையாது என தெரிவித்து உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


