முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர்நிறுத்த ஒப்பந்தம் அமல்: காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வாபஸ்

சனிக்கிழமை, 11 அக்டோபர் 2025      உலகம்
Gaza 2024-04-15

Source: provided

காசா : காசா போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததையடுத்து இஸ்ரேல் படைகள் வாபஸ் பெற்றனர்.

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே 2 ஆண்டுகளாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் தொடர் முயற்சிகள் காரணமாக, எகிப்து நாட்டின் ஷர்ம்-எல்-ஷேக் நகரில் இருதரப்புக்கிடையே 3 நாட்களாக பேச்சுவார்த்தை நடந்தது. அதன் முடிவில், முதல்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த 3 தினங்களுக்கு முன்பு  கையெழுத்தானது. ஒப்பந்த விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஒப்பந்தத்துக்கு டிரம்பும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 3 தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில், காசாவில் போர் நிறுத்தத்துக்கான டிரம்பின் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஹமாஸ் பிடியில் மீதி உள்ள பணயக் கைதிகள் அனைவரையும் விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தின் சுருக்கத்துக்கும் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இது, போர்நிறுத்தத்துக்கு முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது.

இதுபற்றி நெதன்யாகு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், பணயக் கைதிகள் விடுவிப்புக்கான ஒப்பந்தத்தின் சுருக்கத்துக்கு இஸ்ரேல் மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. திட்டத்தின் மற்ற அம்சங்கள் குறித்து எதுவும் கூறப்படவில்லை. சில மணி நேரங்கள் கழித்து, இஸ்ரேல் ராணுவம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. காசாவில், இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் உள்ளூர் நேரப்படி மதியம் அமலுக்கு வந்ததாக அறிவித்தது. 

இதனிடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை கண்காணிக்க இஸ்ரேலுக்கு 200 துருப்புகளை அனுப்பி வைக்கப்போவதாக அமெரிக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில், பணயக் கைதிகளின் குடும்பத்தினர் மது பாட்டிலை பீய்ச்சியடித்து கொண்டாடினர். சிலர் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

ஹமாஸ் அமைப்பின் பிடியில் உள்ள 48 பணயக் கைதிகளில் 20 பேர் மட்டுமே இன்னும் உயிருடன் இருப்பதாக கருதப்படுகிறது. அவர்களும், இஸ்ரேல் பிடியில் உள்ள பாலஸ்தீன கைதிகளும் 13-ந் தேதி முதல் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது. பாலஸ்தீன கைதிகள் பட்டியலை இஸ்ரேல் வெளியிட உள்ளது. அவர்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், அவர்களது விடுதலைக்கு ஆட்சேபனை தெரிவிப்பதாக இருந்தால், 24 மணி நேரத்துக்குள் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும். காசாவின் பாதுகாப்புக்கு அரபு, முஸ்லிம் நாடுகளை சேர்ந்த படையினர் அடங்கிய சர்வதேச படை பொறுப்பேற்கும் என்று தெரிகிறது. சர்வதேச நிதியுதவியுடன் கூடிய மறுகட்டுமான பணிகளுக்கு அமெரிக்கா தலைமை வகிக்கும்.

இஸ்ரேல் பணயக் கைதிகளின் குடும்பத்தினருடன் டிரம்ப் தொலைபேசியில் பேசினார். பணயக் கைதிகள் 13-ந் தேதி வந்து விடுவார்கள் என்று அவர் கூறினார். டிரம்ப் பேசிய வீடியோவை அமெரிக்க வர்த்தக மந்திரி ஹோவர்டு லுட்னிக் வெளியிட்டுள்ளார். அனுமதி கிடைத்தவுடன் காசாவில் நுழைவதற்காக 1 லட்சத்து 70 ஆயிரம் டன் மருந்துகள் மற்றும் நிவாரண பொருட்கள் தயார்நிலையில் இருப்பதாக ஐ.நா. மனிதாபிமான பிரிவு தலைவர் டாம் பிளெட்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இஸ்ரேலியப் படைகள் போர் நிறுத்தத்தின் பின் வாபஸ்பெறப்பட்டு வரும் நிலையில், காசா மக்கள் கடும் சிதைவுக்குள்ளான தங்கள் வசிப்பிடங்களுக்கு திரும்பி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து