Idhayam Matrimony

தமிழ்நாடு முழுவதும் 9,207 பட்டாசு கடைகளுக்கு அனுமதி

சனிக்கிழமை, 18 அக்டோபர் 2025      தமிழகம்
Firework 2025-10-18

சென்னை, தமிழ்நாடு முழுவதும் 9,207 பட்டாசு கடைகளுக்கு அனுமதி தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தெரிவித்துள்ளது.

தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினர், அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 384 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் தொடர் பணியில் ஈடுபடவுள்ளனர்.

சென்னையில் உள்ள 43 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களில் உள்ள பணியாளர்களும் நேற்று (18-ந்தேதி) முதல் தொடர் பணியில் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுவது குறித்து தமிழகம் முழுவதிலும் 2,705 இடங்களில் (பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில்) விழிப்புணர்வு பிரசாரங்கள் மற்றும் செய்முறை விளக்கங்கள் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் தற்காலிக பட்டாசு விற்பனை செய்வதற்கு 9,207 கடைகளுக்கு தடையின்மைச் சான்றும், சென்னையில் தற்காலிக பட்டாசு விற்பனை செய்வதற்கு 1,088 கடைகளுக்கு தடையின்மைச் சான்றும் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முழுவதும் 770 கடைகளுக்கும், சென்னையில் மட்டும் 89 கடைகளுக்கும் தடையின்மைச் சான்று மறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து