Idhayam Matrimony

ராணுவத்திற்கு ரூ. 79 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள், தளவாடங்கள் கொள்முதல் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

வெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2025      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி: ரூ.79 கோடிக்கு ஆயுதங்கள், தளவாடங்கள் கொள்முதல் செய்ய ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளார்.

ராணுவ அமைச்சர்  ராஜ்நாத்சிங் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் நடந்தது. அதில், முப்படைகளின் போர்த்திறனை அதிகரிப்பதற்காக ரூ.79,000 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் எடுத்த 2-வது பெரிய முடிவு இதுவாகும். கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி, ரூ.67 ஆயிரம் கோடி மதிப்புள்ள ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதில் இந்திய கடற்படைக்காக போர்க்கப்பல்கள், 30 எம்எம் ரக கடற்படை பீரங்கிகள், அதிநவீன இலகுரக நீர்மூழ்கி குண்டுகள் உள்ளிட்டவை அடங்கும். போர்க்கப்பல்கள், கனரக சாதனங்களையும், தரைப்படை வீரர்களையும் ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும். இலகுரக நீர்மூழ்கி குண்டுகள், எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை தகர்க்க பயன்படும். இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்காக, நாக் ஏவுகணை அமைப்பு, எம்கே-2 ரக ஏவுகணைகள், எலக்ட்ரானிக் உளவு அமைப்பு உள்ளிட்டவை வாங்கப்படுகின்றன. எதிரிகளின் போர் வாகனங்கள், பதுங்கு குழிகள் ஆகியவற்றை தகர்க்க எம்கே-2 ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து