எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லாகூர்: இந்தியாவின் தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் ஜூனியர் உலக கோப்பையில் விளையாடவில்லை என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
விரைவில் புதிய அணி...
இந்தியாவில் நவம்பர்- டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் விளையாட பாகிஸ்தான் அணி தகுதி பெற்றிருந்தது. பாகிஸ்தான் "பி" பிரிவில் இடம் பிடித்துள்ளது. இது பிரிவில் இந்தியா, சிலி, சுவிட்சர்லாந்த அணிகள் இடம் பிடித்துள்ளன. இந்த நிலையில் இந்தியாவின் தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் ஜூனியர் உலக கோப்பையில் விளையாடவில்லை என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச ஹாக்கி பெடரேசனுக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தானுக்குப் பதிலாக விரைவில் புதிய அணி அறிவிக்கப்படும் என சர்வதேச ஹாக்கி பெடரேசன் தெரிவித்துள்ளது.
2-வது முறையாக...
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமடைந்துள்ளது. பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாட மறுத்தது. இதனால் இந்திய அணிகள் விளையாடும் போட்டிகள் துபாய்க்கு மாற்றப்பட்டது. தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் உலக கோப்பையில் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் ஹாக்கி அணி இதற்கு முன்னதாக பீகாரில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் இருந்து விலகியிருந்தது. தற்போது 2-வது முறையாக விலகியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


