Idhayam Matrimony

அமெரிக்கா: துப்பாக்கி சூட்டில் 4 பேர் காயம்

சனிக்கிழமை, 25 அக்டோபர் 2025      உலகம்
Gun 2023 04 17

Source: provided

வாஷிங்டன் டி.சி: அமெரிக்கா பல்கலைக்கழகம் அருகே துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில்  4 பேர் காயம் அடைந்தனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஹோவார்டு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி நேற்றிரவு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில், நேற்றிரவு 8.23 மணியளவில் ஹோவார்டு பல்கலைக்கழகத்திற்கு வெளியே திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் பலர் தாக்கப்பட்டனர். எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பதுபற்றி அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும், 4 பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இருக்கும் என தெரிகிறது. 

ஒருவர் பலத்த காயமடைந்து உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த துப்பாக்கி சூட்டுக்கான உள்நோக்கம் என்னவென தெரிய வரவில்லை. அந்த பகுதியை தங்களுடைய கட்டுக்குள் கொண்டு வந்த போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து