Idhayam Matrimony

கேரளாவில் நிலச்சரிவு: ஒருவர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 26 அக்டோபர் 2025      இந்தியா
Himachal 2025-09-07

Source: provided

திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இடுக்கி மாவட்டம் அடிமலி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தின் இடுக்கி மாவட்டம் அடிமலி கிராமத்தில் கனமழையால் நிலச்சரிவு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று அந்த கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றினர்.

அதில், பிஜு மற்றும் அவரது மனைவி சந்தியாவும் அடக்கம். அதேவேளை, பாதுகாப்பான பகுதிக்கு சென்றபின்னர் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களை எடுக்க வேண்டும் என பிஜுவும் அவரது மனைவியும் இரவு 11 மணிக்குமேல் மீண்டும் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது, திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

இதில் வீட்டிற்குள் இருந்த பிஜுவும் அவரது மனைவி சந்தியாவும் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் பல மணிநேரம் போராடி சந்தியாவை காயங்களுடன் மீட்டனர். ஆனால், நிலச்சரிவால் வீட்டின் இடிபாடுகளுக்குள் சிக்கிய பிஜு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் நேற்று அதிகாலை மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து