எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லாகூர் : ஆப்கானிஸ்தானுடன் நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாவிட்டால் பாகிஸ்தான் வெளிப்படையான போரை தொடங்கும் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே எல்லையில் சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து கத்தார், துருக்கி தலையிட்டு மத்தியஸ்தம் செய்தன. தோகாவில் நடந்த முதல் சுற்று பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே கடந்த 19-ந்தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதற்கிடையே பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே 2-வது சுற்று பேச்சுவார்த்தை நேற்று துருக்கியின் இஸ்தான்புல்லில் தொடங்கியது. இதன் முதல் நாளில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இந்த நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப், "இஸ்தான்புல்லில் ஆப்கானிஸ்தானுடன் நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாவிட்டால் பாகிஸ்தான் வெளிப்படையான போரை தொடங்கும். ஆனால் அவர்கள் அமைதியை விரும்புகிறார்கள் என்பதை நான் அறிவேன்" என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


