முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'பைசன்' படக்குழுவினருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு : இயக்குனர் மாரி செல்வராஜ் நன்றி

ஞாயிற்றுக்கிழமை, 26 அக்டோபர் 2025      தமிழகம்
CM-2-2024-12-31

Source: provided

சென்னை : மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் வெளியான 'பைசன்' வசூல் குவித்து வருகிறது. அந்த வகையில், படம் வெளியான 5 நாட்களில் உலக அளவில் ரூ.35 கோடி வசூலித்துள்ளது.

இந்நிலையில், பைசன் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் ஹீரோ துருவ் விக்ரமை முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார். இதுகுறித்து முதல்வர்  மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவை பகிர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பதிவில், "என் முதல் படமான பரியேறும் பெருமாளில் ஆரம்பித்து கர்ணன், மாமன்னன், வாழை இப்போது பைசன் வரை என் மீதும் என் படைப்பின் மீதும் பெரும் நம்பிக்கை வைத்து ஆர்வமாய் பார்த்து நேரில் அழைத்து என்னை உச்சிமுகர்ந்து கொண்டாடும் உங்களின் அத்தனை பேரன்பிற்கும் பெரும் பிரியத்திற்கும் என் இதயத்திலிருந்து கசிந்துருகும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா" என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து