Idhayam Matrimony

ஓரணியில் நின்று வாக்குரிமை பறிப்பை நாம் தடுப்போம் : துணை முதல்வர் உதயநிதி பதிவு

செவ்வாய்க்கிழமை, 28 அக்டோபர் 2025      தமிழகம்
Udayanidhi 2024-11-02

Source: provided

சென்னை : வரும் 2026 தேர்தலில் 68,000 வாக்குச்சாவடியிலும் வெற்றி என்ற புதிய வரலாறு படைப்போம் என தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஓரணியில் நின்று அநியாய வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பாசிச பா.ஜ.க.வும் - தேர்தல் ஆணையமும் தமிழ்நாட்டில் அரங்கேற்றத் துடிக்கும் சிறப்பு வாக்காளர் திருத்தம் எனும் வாக்குரிமைப் பறிப்புச்சதியை முறியடிக்க நம் உடன்பிறப்புகள் களமிறங்கி விட்டனர். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற 'என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி' பயிற்சிக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த கழக நிர்வாகிகளுடன் நாமும் கலந்து கொண்டோம். ஓரணியில் நின்று அநியாய வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம். 2026 தேர்தலில் கழக அணி 68,000 வாக்குச்சாவடியிலும் வெற்றி என்ற புதிய வரலாறு படைப்போம். தமிழ்நாடு என்றும் தலைகுனியாது என்பதை மீண்டும் நிரூபிப்போம். என தெரிவித்துள்ளார் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து