Idhayam Matrimony

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியால் தேர்தல் நடைமுறை மீதான மக்களின் நம்பிக்கையை இழக்க வழிவகுக்கும் : கேரள முதல்வர் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 28 அக்டோபர் 2025      இந்தியா
Pinaraye 2024-12-04

Source: provided

திருவனந்தபுரம் : வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி ஜனநாயகத்திற்கு ஆபத்து என்று குற்றஞ்சாட்டியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், இது தேர்தல் நடைமுறை மீதான மக்களின் நம்பிக்கையை இழக்க வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்கள் உள்பட 10 முதல் 15 மாநிலங்களில் பீகாரைப் போல வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிகளுக்கு தமிழகம், கேரளா, மேற்குவங்காளம் போன்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி ஜனநாயகத்திற்கு ஆபத்து என்று கேரள முதல்வர்  பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியின் மூலம் தேர்தல் ஆணையத்தின் நோக்கம் சந்தேகத்தை எழுப்புகிறது. இது தேர்தல் நடைமுறை மீதான மக்களின் நம்பிக்கையை இழக்க வழிவகுக்கும். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி தற்போது உள்ள வாக்காளர் பட்டியல் அடிப்படையில் இல்லாமல் 2004ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் அடிப்படையில் நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி ஜனநாயகத்திற்கு ஆபத்தானதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து