Idhayam Matrimony

வடகிழக்கு பருவமழை எதிரொலி: 6 நாட்களில் 4.12 லட்சம் பேருக்கு உணவு: தமிழ்நாடு அரசு தகவல்

செவ்வாய்க்கிழமை, 28 அக்டோபர் 2025      தமிழகம்
TN-1 2025-10-28

Source: provided

சென்னை : வடகிழக்கு பருவமழை எதிரொலி காரணமாக 6 நாட்களில் 4.12 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வரின் உத்தரவின்படி, வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பருவமழையின்போது தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை மீட்டு தங்க வைப்பதற்காக, மாநகராட்சியின் சார்பில் 215 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், இந்த நிவாரண மையங்களில் தங்க வைக்கப்படும் பொதுமக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் ஆகியோருக்கு உணவு வழங்க ஏதுவாக 111 மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த சமையல் கூடங்களில் பொதுமக்களுக்கு உணவு தயாரிக்க ஏதுவாக அரிசி மற்றும் மளிகைப்பொருட்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 

வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு 22.10.2025 முதல் 27.10.2025 அன்று இரவு வரை மொத்தம் 4,12,150 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று (28.10.2025) காலை 9 சமையல் கூடங்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டு, திருவொற்றியூர் மண்டலத்தில் 10,000 நபர்கள், மணலி மண்டலத்தில் 5,000 நபர்கள், மாதவரம் மண்டலத்தில் 3,500 நபர்கள், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 18,000 நபர்கள், ராயபுரம் மண்டலத்தில் 17,000 நபர்கள், பெருங்குடி மண்டலத்தில் 1,000 நபர்கள் என மொத்தம் 54,500 நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் 22.10.2025 முதல் 28.10.2025 (நேற்று) காலை வரை 4,66,650 நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து