முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே.ஜ. கூட்டணி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 28 அக்டோபர் 2025      இந்தியா
Tejasvi-2025-10-23

Source: provided

பாட்னா : பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிக்க வேண்டும் என்று தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் நவ. 6 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்குவதால் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், தேர்தல் அறிக்கையை நேற்று தாங்கள் வெளியிட உள்ளதாகக் கூறினார். அதில், மாநிலத்தை முன்னேற்றுவதற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கான தங்கள் திட்டம் குறித்து விரிவாக தெரிவிக்கப்படும் என அவர் கூறினார்.

நாங்கள் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளுக்கு எவ்வாறு செயல்படப் போகிறோம் என்பதற்கான தேஜஸ்வியின் பிரமாணப் பத்திரத்தை நாங்கள் வெளியிடப் போகிறோம். அதேபோல், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மேலும், அவர்களின் திட்டங்கள் என்ன? அவர்களின் தொலைநோக்குப் பார்வை என்ன? பீகாரை எவ்வாறு முன்னோக்கிக் கொண்டு செல்லப் போகிறார்கள்? என்பது குறித்து அவர்கள் தெரிவிக்க வேண்டும்.

நாங்கள் எங்கள் தொலைநோக்குப் பார்வையை வழங்கியுள்ளோம். பீகாரை முதல் மாநிலமாக மாற்றுவதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். ஆனால், அவர்கள் எதிர்மறையான விஷயங்களை மட்டுமே பேசுகிறார்கள். எங்கள் தலைவர்களைப் பற்றி குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து