எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கான்பெரா : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி-20 தொடரை வெற்றியுடன் தொடங்குமா இந்திய அணி என்ற ஆவல் இந்திய ரசிகர்கள் இடையே எழுந்துள்ள நிலையில் முதல் போட்டி இன்று கான்பெராவில் நடைபெறுகிறது.
ஒருநாள் தொடரை...
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள்கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே டி20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது. அதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 போட்டி இன்று கான்பெராவில் நடைபெற உள்ளது.
தீவிர வலைப்பயிற்சி...
இந்த நிலையில் முதல் டி20 போட்டியையொட்டி இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டது. அங்கு பனிபொழிவு அதிகமாக உள்ளதால் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. இருப்பினும் குளிரையும் பொருட்படுத்தாமல் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டனர். இது தொடர்பான வீடியோவை பி.சி.சி.ஐ. எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பந்து வீசுவார்...
இந்நிலையில் இந்த ஆஸ்திரேலியா தொடரின் போது இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஷிவம் துபே பந்து வீசுவாரா? என்பது குறித்த கேள்விக்கு கேப்டன் சூர்யகுமார் யாதவ் சில சுவாரஸ்யமான பதில்களை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஷிவம் துபே இந்த தொடரில் நிச்சயமாக பந்து வீசுவார். இங்குள்ள ஆடுகளங்களில் எவ்வாறு பந்துவீச வேண்டும்? என்பது அவருக்கு தெரியும். ஏற்கனவே ஆஸ்திரேலியா வந்த அவர் பயிற்சியின் போது மிகச் சிறப்பாக பந்து வீசியிருந்தார். அதோடு தனது பந்துவீச்சில் தினமும் பயிற்சியும் செய்து வருகிறார்.
தயாராகி வருகிறார்....
அவர் தொடர்ந்து பந்துவீசி பயிற்சி பெறுவதாலும் அவரது திறன் மீது எனக்கு நம்பிக்கை இருப்பதனாலும் ஆசிய கோப்பை தொடரில் அவருக்கு பந்துவீச வாய்ப்பு கொடுத்தேன். கடந்த 8 முதல் 10 ஆண்டுகளாக நான் அவரை அருகில் இருந்து பார்த்து வருகிறேன். அவரால் நிச்சயம் டி20 போட்டிகளில் சிறப்பாக பந்துவீச முடியும். எனவே இந்த ஆஸ்திரேலியா தொடரிலும் அவர் பந்து வீசுவார். இந்த தொடருக்காக தனது பவுலிங்கில் நிறைய பயிற்சிகளை மேற்கொண்டுள்ள அவர் சரியான முறையில் தயாராகி வருகிறார். அதோடு அவரது திட்டம் என்ன? அவரது பந்துவீச்சில் என்ன செய்யலாம்? என்பது அவருக்கு நன்றாக தெரியும். எனவே அதற்கு ஏற்றவாறு அவருக்கு பந்துவீச வாய்ப்பினை வழங்குவேன். இவ்வாறு அவர் கூறினார்.
போட்டி நடைபெறும் நேரம்
இரு அணிகள் மோதும் 5 டி-20 போட்டிகளும் இந்திய நேரப்படி மதியம் 1.45-க்கு தொடங்குகிறது. ஆனால் ஆஸ்திரேலியாவின் உள்ளுர் நேரப்படி முதல் 3 போட்டிகள் மாலை 7.15 மணிக்கு தொடங்குகிறது. கடைசி 2 போட்டிகள் மாலை 6.15 மணிக்கு தொடங்குகிறது. ஆனால் இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கே தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவில் நேரம் மாறுபட்டாலும் இந்தியாவில் அதே நேரத்தில் போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


