Idhayam Matrimony

மோந்தா புயல் ஆந்திராவுக்கு 50 கி.மீ. தொலைவில் நெருங்கியது

செவ்வாய்க்கிழமை, 28 அக்டோபர் 2025      தமிழகம்
Puyal 2023 06 11

Source: provided

சென்னை : மோந்தா புயல் ஆந்திராவுக்கு 50 கி.மீ. தொலைவில் நெருங்கியது.

வங்கக் கடலில் உருவாகி, ஆந்திரத்தை நோக்கி நகர்ந்து வரும் தீவிரப் புயலான மோந்தா, தற்போது ஆந்திரத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் கடலில் மையம் கொண்டிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

ஆந்திர கடற்கரையை மோந்தா புயல் நெருங்கிவரும் நிலையில், ஆந்திரம் மற்றும் ஒடிசா மாநில கடலோர மாவட்டங்கள் உச்சபட்ச கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. மோந்தா தீவிரப் புயலானது செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி ஆந்திர மாநிலத்தின் மசிலிப்பட்டினத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருப்பதாகவும், நேற்று காலை 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த புயலானது ஒரு சில மணி நேரங்களாக மீண்டும் பழைய வேகத்தில் அதாவது 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆந்திர கடற்கரையை தீவிர புயல் நெருங்கும் நிலையில், ராஜமுந்திரி விமான நிலையத்தில் மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, நேற்று முன்தினம்  புயலான வலுப்பெற்று நேற்று காலை தீவிரப் புயலாக மாறி, ஆந்திரத்தில் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கவிருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து