எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கவுகாத்தி : 13-வது ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு முதல் அரைஇறுதி ஆட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று (புதன் கிழமை) நடக்கிறது. இதில் இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
முதல் 4 இடங்கள்...
13-வது ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கடந்த 30-ந் தேதி இந்தியா, இலங்கையில் தொடங்கியது. 8 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடரில் கடந்த 26-ந்தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. லீக் முடிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றன. இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் முறையே 5 முதல் 8-வது இடங்களை பிடித்து வெளியேறின.
9-வது தடவையாக...
2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு முதல் அரைஇறுதி ஆட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று (புதன் கிழமை) நடக்கிறது. இதில் இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறுப்போவது யார்? என்ற ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. 4 முறை சாம்பியனான இங்கிலாந்து அணி 9-வது தடவையாக இறுதிப் போட் டிக்கு தகுதிபெறும் ஆர்வத்தில் உள்ளது.
பதிலடி கொடுக்கும்...
தென்ஆப்பிரிக்கா இதுவரை இறுதிப் போட்டிக்கு நுழைந்தது கிடையாது. 3 தடவை அரை இறுதியில் தோற்றது. முதல் முறையாக இறுதிப்போட்டி வேட்கையில் உள்ளது. இரு அணிகளும் கடந்த 3-ம் தேதி கவுகாத்தியில் மோதிய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 69 ரன்னில் தென் ஆப்பிரிக்காவை சுருட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் விளையாடும். தென்ஆப்பிரிக்கா பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


