Idhayam Matrimony

ஐ.சி.சி. பேட்டிங் தரவரிசை: ஸ்மிருதி தொடர்ந்து முதலிடம்

செவ்வாய்க்கிழமை, 28 அக்டோபர் 2025      விளையாட்டு
Smriti-Mandhana 2024-08-21

Source: provided

துபாய் : இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஐ.சி.சி. ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் 828 ரேட்டிங் புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். 

தொடர்ந்து முதலிடம்....

ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. இன்று (அக்டோபர் 28) வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் துணைக் கேப்டனான ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் ஸ்மிருதி மந்தனா தொடக்கப் போட்டிகளில் சரியாக ரன்கள் குவிக்காவிட்டாலும், கடைசியாக நடைபெற்ற இரண்டு லீக் போட்டிகளிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 109 ரன்கள் மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 34 ரன்கள் எடுத்து அசத்தினார்.

731 புள்ளிகளுடன்....

இந்த இரண்டு போட்டிகளிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், 828 ரேட்டிங் புள்ளிகளுடன் ஸ்மிருதி மந்தனா பேட்டிங் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். 731 ரேட்டிங் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஆஷ்லே கார்டனர் உள்ளார். லாரா வோல்வர்ட் (716 ரேட்டிங் புள்ளிகள்) , நாட் ஷிவர் பிரண்ட் (711 ரேட்டிங் புள்ளிகள்) மற்றும் பெத் மூனி (709 ரேட்டிங் புள்ளிகள்) ஆகியோர் முறையே மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளனர். ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஆஷ்லே கார்டனர் முதலிடத்திலும், இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 5-வது இடத்திலும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து