எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக நேற்று தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட 12 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
தமிழகம் உள்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணி என்ற எஸ்.ஐ.ஆர் நடைபெற உள்ளது. அதற்காக வருகிற 4-ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 4-ம் தேதி வரை பூத் லெவல் அதிகாரிகள் வீடு வீடாக வந்து கணக்கெடுப்பு படிவத்தை கொடுப்பார்கள் என்றும் அந்த படிவத்தை பொதுமக்கள் நிரப்பி தர வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 9-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் பின் பிப்ரவரி மாதம் 7-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். அறிவிக்கப்பட்டு உள்ளதால் இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், நேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்றது. சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பா.ஜ.க., தே.மு.தி.க., நா.த.க., வி.சி.க., ஆம் ஆத்மி உள்ளிட்ட 12 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


