Idhayam Matrimony

ரூ. 1.86 லட்சத்திற்கு ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி

வெள்ளிக்கிழமை, 31 அக்டோபர் 2025      இந்தியா
Online 2025-10-18

Source: provided

பெங்களூரு : ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பார்சலில் செல்போனுக்கு பதில் வீட்டின் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் டைல்ஸ் கல்  இருந்துள்ளது. 

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் எலச்செனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரேமானந்த். இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதனிடையே, கடந்த 14ம் தேதி ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் ரூ.1.86 லட்சத்திற்கு செல்போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். தனது கிரிடிட் கார்டு மூலம் அவர் ஆடர் செய்துள்ளார்.

இந்நிலையில், பிரேமானந்த் ஆர்டர் செய்த செல்போன் பார்சல் கடந்த 19ம் தேதி மாலை வீட்டிற்கு வந்து வந்துள்ளது. டெலிவரி ஊழியர் அந்த பார்சலை பிரேமானந்த்திடம் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து, வீட்டிற்கு வந்த பிரேமானந்த் பார்சலை திறந்து பார்த்துள்ளார். அப்போது அதில் செல்போனுக்கு பதில் வீட்டின் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் டைல்ஸ் கல்  இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரேமானந்த் உடனடியாக இதுகுறித்து தேசிய சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். மேலும், அப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்திலும் பிரேமானந்த் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து