முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு: தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 31 அக்டோபர் 2025      தமிழகம்
Annamalai 2024-10-28

Source: provided

சென்னை : சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

தமிழக முன்னாள் பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

திருப்பூர் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்காக பல்லடம் அருகே உள்ள சின்னக்காளி பாளையத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஆனால், மாநகராட்சியால் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை சுற்றி சுமார் 50 ஆயிரம் மக்கள் வசித்து வருவதால் அவ்விடத்தை குப்பை கொட்டுவதற்கு பயன்படுத்தக் கூடாது என மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மேலும், இடுவாய் கிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் இதற்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சின்னக்காளி பாளையத்தை ஒட்டிய பகுதிகள், விவசாயம் செழித்து வளர்ந்துள்ள பகுதியாக இருக்கும் போது, குப்பை கொட்டப்பட்டால் இப்பகுதியை சுற்றியுள்ள நான்கு ஊராட்சிகளிலும் நிலத்தடி நீர் மாசுபடும். இதுமட்டுமின்றி, இப்பகுதிக்கு மிக அருகிலேயே இப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் சுமார் 5.4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியும், கிளை வாய்க்காலும் அமைந்துள்ளது. மேலும், குப்பை கொட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்திற்கு எதிரிலேயே மத்திய அரசின் வன மரபியல் மற்றும் வன பெருக்கு நிறுவனத்தின் மூங்கில் பூங்கா அமைந்துள்ளது. இதன் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி மையமாகவும் இப்பகுதி விளங்குகிறது.

இயற்கைக்கும், விவசாயத்திற்கும் இத்தனை முக்கியத்துவம் பெற்றுள்ள இப்பகுதியை நாசமாக்கி குப்பை மேடாக மாற்ற தி.மு.க. அரசு நினைப்பது என்ன மாதிரியான மனநிலை? உடனடியாக, சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு அமைக்கும் முடிவை கைவிடவேண்டும் என தி.மு.க. அரசை கண்டிப்புடன் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து