எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : ஈரோடு - செங்கோட்டை விரைவு ரயில் இயக்கம் பகுதியளவு ரத்து செய்யப்பட்டது.
மதுரை ரயில்வே கோட்டத்தில் வாடிப்பட்டி, சமயநல்லூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் புதுப்பித்தல் (Track Renewal) பணிகள் நடைபெறுவதால், பின்வரும் ரயில் சேவைகள் பகுதியளவு ரத்து செய்யப்படுகின்றன. பகுதியளவு ரத்து செய்யப்பட்ட ரயில்கள்:-
ஈரோடு சந்திப்பு-செங்கோட்டை விரைவு ரயில் (ரயில் எண்: 16845), புறப்படும் நேரம்: ஈரோடு சந்திப்பில் இருந்து மதியம் 2 மணிக்கு. பகுதியளவு ரத்து: திண்டுக்கல், செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது. ரத்துக் காலம்: 31.10.2025 முதல் 29.11.2025 வரை. விதிவிலக்கு: நவம்பர் 4, 11, 18, & 25, 2025 (செவ்வாய் கிழமைகள்) தவிர மற்ற நாட்களில் ரத்து. இந்த ரயில் ஈரோட்டில் இருந்து திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும். திண்டுக்கல்லில் இருந்து செங்கோட்டை வரை இயக்கப்படாது.
செங்கோட்டை-ஈரோடு சந்திப்பு விரைவு ரயில் (ரயில் எண்: 16846), புறப்படும் நேரம்: செங்கோட்டையில் இருந்து காலை 5.10 மணிக்கு. பகுதியளவு ரத்தாக செங்கோட்டை திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது. 1.11.2025 முதல் 30.11.2025 வரை. நவம்பர் 5, 12, 19, & 26, 2025 (புதன் கிழமைகள்) தவிர மற்ற நாட்களில் ரத்து. இயக்கம்: இந்த ரயில் செங்கோட்டையில் இருந்து திண்டுக்கல் வரை இயக்கப்படாது. இது திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு ஈரோடு வரை மட்டும் இயக்கப்படும். பயணிகள் இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


