Idhayam Matrimony

தி.மு.க.வின் அனைத்துக்கட்சி கூட்டம் மூலம் பா.ம.க.வுடன் கூட்டணிக்கு தூதா?

வெள்ளிக்கிழமை, 31 அக்டோபர் 2025      தமிழகம்
GK-Mani-2025-05-31

Source: provided

சென்னை : தி.மு.க.வின் அனைத்துக்கட்சி கூட்டம் மூலம் பா.ம.க.வுடன் கூட்டணிக்கு தூது விடப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு எதிராக தி.மு.க. சார்பில் 2-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முறைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பதால் பாஜக, அதி.மு.க.வுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

பா.ம.க.வில் இருந்து டாக்டர் அன்புமணியை அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நீக்கி உள்ளதால் அவருக்கும் அழைப்பு கடிதம் அளிக்கப்படவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில், தி.மு.க. நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்துக்கு கட்சிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பிதழ் தேர்தல் கூட்டணிக்கான அழைப்பாகவும் கருதப்படுகிறது. பா.ம.க.வில் உள்கட்சி பூசல் பூதாகரமாகி டாக்டர் ராமதாஸ் தலைமையில் ஒரு அணி, டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் மற்றொரு அணி என அக்கட்சி 2 ஆக பிரிந்துள்ளது.

இந்தநிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு மட்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்கான அழைப்பு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஏற்று பா.ம.க. சார்பில் ஜி.கே.மணி கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஜி.கே.மணி போன்ற நிர்வாகிகள் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற மனநிலையில் இருப்பதாக கூறப்படும் வேளையில் இந்த அழைப்பு கடிதம் கூட்டணிக்கான தூதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

சமீபத்தில் டாக்டர் அன்புமணி ராமதாசை பா.ஜனதாவின் தேசிய துணை தலைவரும், தமிழக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளருமான வைஜயந்த் பாண்டா எம்.பி. சந்தித்து பேசி இருந்தார். எனவே அவர், பா.ஜனதா கூட்டணி நிலைப்பாட்டை எடுக்கலாம் என்பதால் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து