எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
வருகிற நவம்பர் 15-ந்தேதி சென்னை சென்டிரலில் இருந்து கா்நாடக மாநிலம் யஸ்வந்த்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.12292), இரவு 11.30 மணிக்கு பதிலாக இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு (25 நிமிடம் தாமதம்) செல்லும். சென்னை எழும்பூரில் இருந்து இன்று (சனிக்கிழமை) மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (12635), வழக்கமான நேரத்தைவிட 20 நிமிடமும், சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 3,5,8,12,13,15 ஆகிய தேதிகளில் மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (12635), வழக்கமான நேரத்தைவிட 30 நிமிடமும் தாமதமாக மதுரை சென்றடையும்.
நாகர்கோவிலில் இருந்த வருகிற நவம்பர் 8,15 ஆகிய தேதிகளில் காலை 9.15 மணிக்கு புறப்பட்டு காச்சிகுடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16354), வழக்கமான நேரத்தைவிட 3 மணி நேரம் தாமதமாக காச்சிகுடா சென்றடையும். மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து வருகிற நவம்பர் 12-ந்தேதி இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் (12839), வழக்கமான நேரத்தைவிட 55 நிமிடம் தாமதமாக சென்டிரல் வந்தடையும். அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து வருகிற நவம்பர் 11-ந்தேதி இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (12516), வழக்கமான நேரத்தைவிட 50 நிமிடம் தாமதமாக கோவை வந்தடையும்.
சண்டிகாரில் இருந்து வருகிற நவம்பர் 5-ந்தேதி காலை 8.05 மணிக்கு புறப்பட்டு மதுரை வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (20494), வழக்கமான நேரத்தைவிட 40 நிமிடம் தாமதமாக மதுரை வந்தடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


