Idhayam Matrimony

வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு

வெள்ளிக்கிழமை, 31 அக்டோபர் 2025      தமிழகம்
Puyal

Source: provided

சென்னை : வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த 16-ம் தேதி தொடங்கியது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தான் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தீவிர புயலாக உருவாகியுள்ளது. அந்த வகையில் அந்த புயலுக்கு மோன்தா என பெயரிடப்பட்டுள்ளது. முதலில் இந்த புயல் சென்னையை நோக்கி வருவதாக கணிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னைக்கு அருகே வந்து அங்கிருந்து ஆந்திர மாநிலம் காக்கிநாடா - மசூலிப்பட்டினம் இடைய கரையை கடந்தது. இதையடுத்து தமிழகத்தில் பெய்து வந்த மழை நின்று தற்போது வெயில் அடிக்கத்தொடங்கி உள்ளது.

இந்நிலையில் வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு மியான்மர், அந்தமான் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து