முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் மாவட்டத்தில் சோகம்: மணல் லாரி கவிழ்ந்து வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழப்பு

சனிக்கிழமை, 1 நவம்பர் 2025      தமிழகம்
Lorry-Strike 2023-06-06

Source: provided

கரூர் : கரூர் மாவட்டம் தென்னிலை அருகே எம் சாண்ட் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து வடமாநிலத் தொழிலாளர்கள் 3 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார்.

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகேயுள்ள கோடந்தூரில் தனியார் கிரஷர் செயல்படுகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். நேற்று (நவ.1) அதிகாலை 5 மணிக்கு எம் சாண்ட் ஏற்றிக் கொண்டு லாரி கோவை புறப்பட்டது.

கரூர் வெங்கமேட்டைச் சேர்ந்த சந்தனகுமார் (41) லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். தென்னிலை அருகே முதலிகவுண்டம்பாளையம் அருகே செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லாரியில் எம் சாண்ட் மீது அமர்ந்து பயணம் செய்த வடமாநிலத் தொழிலாளர்கள் சிக்கந்தர் கேட்டா (21), வித்யநாத் பிரபாகரன் (47), அஜய் பங்கரா (30) ஆகிய 3 பேரும் எம் சாண்ட் குவியலில் சிக்கி மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் பல்ஜெம்ஸ் பர்வா (30) கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துமவனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த தென்னிலை போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்த காயமடைந்த பல்ஜெம்ஸ் பர்வாவை மீட்டு சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், உயிரிழந்தவர்கள் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து