முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில்நுட்ப கோளாறு எதிரொலி: துபாய்-மங்களூரு விமானம் ரத்து

செவ்வாய்க்கிழமை, 4 நவம்பர் 2025      தமிழகம்
Air

Source: provided

துபாய்: தொழில்நுட்க கோளாறு காரணமாக துபாய் - மங்களூரு விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் மங்களூருக்கு தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு இரவு 11.40 மணிக்கு ஐ.எக்ஸ் 814 என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்  170 பயணிகளுடன் மங்களூருக்கு புறப்பட தயாராக இருந்தது.

விமானம் ஓடு பாதையில் செல்லும் போது திடீரென்று தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து விமானி மீண்டும் விமான நிலையத்துக்கு திரும்புவதாக அறிவித்தார். இதனால் பல பயணிகள் அதிருப்தியடைந்தனர். மேலும், உடனடியாக மாற்று விமானம் ஏற்பாடு செய்ய முடியாது என அதிகாரிகள் கூறியதால் விமான நிலையத்தில் பயணிகள் தங்க வைக்கப்பட்டனர். பலருக்கு வேறு நாளில் செல்லவும், பணத்தை திரும்ப பெறவும் வாய்ப்பளிக்கப்பட்டது.

பின்னர், மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த விமானத்தில் 110 பயணிகள் புறப்பட தயாராக இருந்தனர். மாற்று விமானம் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த விமானமும் ரத்து செய்யப்பட்டது. இதனால் மீண்டும், மீண்டும் விமானம் ரத்து செய்யப்பட்டதால் மங்களூரு செல்லும் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். குறிப்பாக பெண்கள், வயதானவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நேற்று இரவு வரை அந்த விமானம் புறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து