Idhayam Matrimony

உத்திரபிரதேசத்தில் சோகம்: எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 4 பேர் பலி

புதன்கிழமை, 5 நவம்பர் 2025      இந்தியா
Train 2023-04-06

Source: provided

லக்னோ: உத்திரபிரதேசத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

உத்தரபிரதேசத்தின் மிசார்பூர் மாவட்டம் சனூரில் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு நேற்று பிரயாக்ராஜ் - சோபன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அந்த ரயிலில் இருந்து பயணிகள் நடைமேடையில் இறங்கினர். அப்போது சில பயணிகள் எதிரே உள்ள நடைமேடைக்கு செல்ல படிகளை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை கடந்து நடைமேடையில் ஏற முயற்சித்தனர்.

இந்நிலையில், பயணிகள் தண்டவாளத்தை கடந்துகொண்டிருந்தபோது அந்த தண்டவாளத்தில் ஹவுரா - கல்கா நேதாஜி எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்தது. இதில், தண்டவாளத்தை கடக்க முயன்ற பயணிகள் மீது ரயில் மோதியது. ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட 4 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற ரயில்வே போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து