Idhayam Matrimony

தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை வைத்து வாக்காளித்த பீகார் மக்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2025      இந்தியா
Election Commissioner

Source: provided

பாட்னா : தேர்தல் ஆணையத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து வாக்களித்த‌தாக பீகார் மாநில வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பீகார் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டமாக நவம்பர் 6-ம் தேதி 121 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு வருகிற 11-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. பொதுமக்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசைகளில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில், முதல் கட்ட தேர்தலில் மொத்தம் பதிவான வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, 64.66 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து வாக்களித்த‌தாக பீகார் மாநில வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அர்ப்பணிப்புடன் பணியாற்றிய தேர்தல் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து