Idhayam Matrimony

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு: நடத்தை விதிமுறைகள் அமல்

திங்கட்கிழமை, 10 நவம்பர் 2025      இந்தியா
Kerala-Assembly

திருவனந்தபுரம், கேரளாவில் 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச. 9, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அந்த மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ஷாஜஹான் அறிவித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே (நேற்று) முதல் அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு டிசம்பர் 9 ஆம் தேதியும் திருச்சூர், மலப்புரம், வயநாடு, பாலக்காடு, கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு டிசம்பர் 11 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது.

மேற்குறிப்பிட்ட 2 நாள்களிலும் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை டிச. 13 ஆம் தேதி நடைபெறும். நவம்பர் 21 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம், வேட்புமனு மீதான பரிசீலனை நவ. 22 ஆம் தேதி நடைபெறும், நவ. 24 வரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வருவதாகவும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஷாஜஹான் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. கிராம பஞ்சாயத்துகளில் 17,337 வார்டுகள், தொகுதி பஞ்சாயத்துகளில் 2,267 வார்டுகள், 346 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகள், 3,205 நகராட்சி வார்டுகள் மற்றும் 421 மாநகராட்சி வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளதாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து