எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி, எஸ்.ஐ.ஆர். போன்ற புது யுக்திகளை கையாண்டாலும் தி.மு.க.வை ஒருபோதும் யாராலும் அழிக்க முடியாது என்று திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தி.மு.க. எம்.எல்.ஏ பழனியாண்டி இல்லத் திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- கடந்த 75 ஆண்டுகளாக சகோதரத்துவ உணர்வோடு நம் இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். தி.மு.க.வை கழகத்தினர் கழகம் என்று மட்டும் அழைப்பதில்லை, இயக்கம் என்றும் அழைப்பது உண்டு. காரணம், இயக்கம் என்பது ஓய்வே இல்லாமல் உழைப்பது. அப்படியான இயக்கம்தான் நம் இயக்கம்.
ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும், தேர்தல் நேரமாக இருந்தாலும், இல்லை என்றாலும், எப்போதுமே தி.மு.க.வில் இருப்பவர்களுக்கு ஓய்வு என்பதே இல்லை. களப்பணிகள் எப்போதும் இருக்கும். இப்படி சுறுசுறுப்பாக இருப்பதால்தான், இன்றும் கம்பீரமாக நடைபோடுகிறோம். தடைகளை பார்த்துக்கூட தி.மு.க. இயக்கம் நின்றதே இல்லை.
தி.மு.க.வை அழிக்கப்போகிறோம் எனக்கூறி எதிரிகள் புதுப்புது உக்திகளை கையாளுகின்றனர். அந்த வகையில் தான் தற்போது எஸ்.ஐ.ஆர்-ஐ கையில் எடுத்துள்ளார்கள். எத்தனை உக்திகளை கையாண்டாலும் தி.மு.க.வை ஒருபோதும் அழிக்க முடியாது.
பா.ஜ.க.வும் தேர்தல் ஆணையமும் எதைச் சொன்னாலும் ஆதரிக்கும் நிலையில்தான் அதி.மு.க. உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. தொடுத்த வழக்கில் அதி.மு.க. தங்களையும் இணைத்துக்கொண்டு கபட நாடகம் ஆடுகிறது. எஸ்.ஐ.ஆர்-ஐ எதிர்க்க துணிச்சல் இல்லை; டெல்லியில் இருக்கும் பிக்பாஸ்க்கு எடப்பாடி பழனிசாமி ஆமாம்சாமி போட்டுத்தான் ஆகணும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


