எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மலேசியா, மலேசியா அருகே கடலில் படகு மூழ்கி 7 அகதிகள் உயிரிழந்ததை முன்னிட்டு பலர் மாயமாகி உள்ளனர்.
மியான்மர் நாட்டில் இருந்து ஏராளமான ரோஹிங்கியர்கள் சட்டவிரோதமாக படகுகள் மூலம் மலேசியாவுக்கு அகதிகளாக செல்கின்றனர். கடந்த 3 தினங்களுக்கு முன்பு 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு கப்பலில் மியான்மரில் இருந்து புறப்பட்டனர்.
தாய்லாந்து- மலேசியா எல்லைக்கு அருகில் அவர்கள் கப்பலில் இருந்து இறங்கி 3 படகுகளில் மலேசியா புறப்பட்டனர். மலேசியா அருகே கடல் பகுதி எல்லையான லங்காவியில் சென்றபோது திடீரென ஒரு படகு கடலில் கவிழ்ந்தது. இதனால் அதில் பயணம் செய்த பயணிகள் கடலில் மூழ்கினார்கள். இதுபற்றி அறிந்ததும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடலில் தத்தளித்து கொண்டிருந்த 13 பேரை பத்திரமாக மீட்டனர்.
பெண்கள், குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்துவிட்டதாக மலேசியா கடல் சார் நிறுவனம் தெரிவித்து உள்ளது. மேலும் படகில் சென்ற நூற்றுக்கணக்கான அகதிகள் மாயமாகிவிட்டனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. உயிர் பலி அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மற்ற 2 படகுகளும் எங்கு சென்றது என தெரியவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


