எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல்லி, பரிதாபாத் வெடிபொருள் பறிமுதலில் வெளியான புதிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய அளவில் பயங்கரவாத சதித் திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அரியாணா மற்றும் ஜம்மு - காஷ்மீர் காவல்துறை இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், பரிதாபாத்தில் வாடகை வீடு ஒன்றில் வெடிபொருள் தயாரிக்கப் பயன்படும் அம்மோனியம் நைட்ரேட் பெரிய அளவில் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. புல்வாமாவைச் சேர்ந்த மருத்துவர் முஸம்மாலுக்கு ஜெய்ஷ் - ஏ - முகமது அமைப்புடன் தொடர்பிருப்பதாக வந்த சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தி, குடியிருப்புப் பகுதியை சோதனை செய்த போது பெரிய அளவில் வெடிபொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மருத்துவர் கைது செய்யப்பட்டு 10 நாள்களுக்குப் பின்னர், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனுடன் வெடிபொருள்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஏராளமான பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனுடன், 12 சூட்கேஸ்கள், 20 டைமர்கள், 4 பேட்டரிகள், ரிமோட்கள், 5 கிலோ எடையுள்ள உலோகம், வாக்கி-டாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இவற்றை பறிமுதல் செய்திருக்கும் காவல்துறையினர், மிகப்பெரிய அளவில் பயங்கரவாத சதித் திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
மேலும், முசம்மாலின் துப்பாக்கி, அவர் பணியாற்றும் மருத்துவமனையின் பெண் மருத்துவர் காரில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், இவர்களுக்கும் பெண் மருத்துவருக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. பெண் மருத்துவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர் தற்போது ஜம்மு -காஷ்மீரில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்த மருத்துவர், பிறகு ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அதில் வெடிபொருள்களை நிரப்பி வைத்திருக்கிறார். பாதுகாப்புக் காரணங்களுக்காக மேலதிகத் தகவல்களை பகிர்ந்துகொள்ள முடியாது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இவர்களது சமிக்ஜைக்காக, இந்திய எல்லைப் பகுதிகளில் பயங்கரவாதிகள் யாரேனும் தயாராக இருக்கிறார்களா, எல்லைத் தாண்டி இவர்களுடன யார் யார் தொடர்பில் இருந்தார்கள் என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


