Idhayam Matrimony

வரும் 14-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்கு தயாராகும்: இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள்

திங்கட்கிழமை, 10 நவம்பர் 2025      விளையாட்டு
Cricket-2025-11-10

மும்பை, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் வருகிற நவம்பர் 14 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்குத் தயாராகி வருகின்றன.

டெஸ்ட் தொடர்...

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற நவம்பர் 14 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் திடலில் தொடங்குகிறது.

இரு அணிகளும் பயிற்சி...

இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் தென்னாப்பிரிக்க வீரர்கள் அனைவரும் கொல்கத்தாவுக்கு வந்தடைந்தனர். காயம் காரணமாக நீண்ட நாள்களாக அணியில் இடம்பெறாமலிருந்த கேப்டன் டெம்பா பவுமா மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். ஈடன் கார்டன்ஸ் திடலில் இன்று (நவம்பர் 11) முதல் இரண்டு அணிகளும் பயிற்சியைத் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

டெஸ்ட் தொடர் விவரம்:

1) முதல் போட்டி - நவம்பர் 14-18, கொல்கத்தா.

2) 2-வது போட்டி - நவம்பர் 22-26, குவாஹாட்டி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து