Idhayam Matrimony

தமிழ்நாட்டில் பருவமழை 3 சதவீதம் குறைவு

புதன்கிழமை, 12 நவம்பர் 2025      தமிழகம்
Rain 2023 07-09

Source: provided

சென்னை : தமிழ்நாட்டில் இயல்பை விட 3 சதவீதம் குறைவாக வடகிழக்கு பருவமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன் தென்மேற்கு பருவமழை விடைகொடுத்து தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் 23 செ.மீ. மழை பெய்தது. இது கடந்த 12 ஆண்டுகளில் மூன்றாவது அதிகபட்சமாகும். அதாவது, வடகிழக்கு பருவமழை சிறப்பாகவே தொடங்கியது எனலாம். ஆனால் நவம்பரில் மழை திடீரென குறைந்தது. நவம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில் வெறும் 1.5 செ.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது. நவம்பர் மாத சராசரி மழை அளவு 18 செ.மீ. என்பதால், இது மிகவும் குறைவு என்று சொல்லப்படுகிறது.

இந்தநிலையில், தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை நேற்று வரை இயல்பை விட 3 சதவீத குறைவாகவே பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்த வரை 15 சதவீத குறைவாக பெய்துள்ளது. இயல்பான நிலையில் 447.9 மிமீ மழை பொழியும் நிலையில், நேற்று வரை 380.3 மிமீ மழை மட்டுமே பொழிந்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் இரண்டாம் பாதியில் நல்ல மழை பெய்யும் என வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து