எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சியில் புதுக்கோட்டை, வேதாரண்யம், பல்லாவரம் ஆகிய 3 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு நடத்தினார். அப்போது வரும் சட்டமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டறிந்த அவர், தேர்தல் பணி குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
தேர்தல் பணிகள்...
தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஒரு சில மாதங்கள் மட்டும் இருக்கும் நிலையில் தி.மு.க. தேர்தல் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, அவ்வப்போது எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், மாவட்ட செயலாளர்கள் கூட்டங்களை நடத்தி தேர்தல் தொடர்பான பணிகள் மூடுக்கி விடப்படுகிறது.
`ஒன் டூ ஒன்' நிகழ்ச்சி...
அதேபோல மக்கள் பிரச்சினைகள், மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு எதிராக கொண்டு வந்திருக்கக்கூடிய திட்டங்களுக்கு சட்டரீதியாக எடுக்க வேண்டிய முடிவுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், 'உடன் பிறப்பே வா' என்ற பெயரில் `ஒன் டூ ஒன்' என்ற நிகழ்ச்சி மூலம் சட்டசபை தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார்.
வெற்றி, தேர்தல் பணி...
அந்த வகையில், நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சியில் புதுக்கோட்டை, வேதாரண்யம், பல்லாவரம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் ஒன் டூ ஒன் சந்திப்பு நடத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின்போது தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு, தேர்தல் பணி உள்ளிட்டவை குறித்து அவர்களிடம் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும் இந்த மூன்று தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றப்பெற வேண்டும் என அறிவுறுத்திய அவர் தொகுதிகளில் உட்கட்சி பூசல் ஏதும் நிகழாமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை மொத்தமாக 37 நாட்களில் 79 சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளை மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


